கொடுத்தாலும் பிரச்சினை, கொடுக்கா விட்டாலும் பிரச்சினை…! பணம் கேட்டு ரேசன் கடைகள் முற்றுகை…! மறியல்….! - Seithipunal
Seithipunal


 

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்தது.

இதை வாங்குவதற்கு, கடந்த இரண்டு நாட்களாக, ஒவ்வொரு ரேசன் கடையிலும், மக்கள் பெரும் கூட்டமாக வந்து,  கியூவில் நின்று, பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். இது வரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் பணம் வழங்க வேண்டும், என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆயிரம் ரூபாய் பணத்தைக் கேட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தேனி மாவட்டம் கம்பம் போன்ற ஊர்களில், மக்கள் திரளாக, ரேசன் கடைகளில் பணத்தை தரச் சொல்லி முற்றுகை இட்டனர்.

இதனால், ரேசன் கடை ஊழியர்கள், வெளியே வர இயலாமல் தவித்தனர். அவர்களை, போலீஸ் அதிகாரிகள் வந்து, மீட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் உள்ள ரேசன் கடையில் பணம் தராததால், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின், உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமைச்சாமி வந்து மக்களை சமாதானப்படுத்தி, கூட்டத்தைக் கலைக்கச் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boycott by the public before the ration shops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->