முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து - கரூரில் பாஜக நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்புவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கரூர் பாஜக பட்டியல் அணி மாவட்ட துணை தலைவராக உள்ள இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து முதல்வர் இறந்ததுபோல் தவறாக வடிவமைத்துள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கமான முகநூல் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இதேபோல், கரூர் மாவட்ட திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள தீபக் என்பவரின் புகைப்படத்தையும் இணைத்து தவறான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். 

இந்த சம்பவம், கரூர் அரசியல் கட்சியினரிடையே வேகமாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான தீபக் முதல்வர் குறித்து தவறான புகைப்படத்தை பதிவிட்ட முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் பேரில், போலீசார் பாஜக நிர்வாகி முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp executers arrested for defaming cm stalin in karur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->