டிடிவி தினகரன் வெளியிட்ட அமமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 11 ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அவற்றின் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அமமுக சார்பில் 24 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அமமுக  நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள்:

1.வடசென்னை - சந்தானகிருஷ்ணன்

2.அரக்கோணம் - பார்த்திபன்

3.வேலூர் - பாண்டுரங்கன் 

4.கிருஷ்ணகிரி - கணேசகுமார்

5.தருமபுரி - பழனியப்பன்

6.திருவண்ணாமலை - ஞானசேகர்

7.ஆரணி - செந்தமிழன்

8.கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன்

9.திண்டுக்கல் - ஜோதி முருகன் 

10.கடலூர் - கார்த்திக்

11.தேனி - தங்க தமிழ்செல்வன்

12.விருதுநகர் - பரமசிவ ஐயப்பன்

13.தூத்துக்குடி - புவனேஸ்வரன்

14.கன்னியாகுமரி - லெட்சுமணன்


அமமுக சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்:

1.சோளிங்கர் - மணி

2.பாப்பிரெட்டிப்பட்டி - ராஜேந்திரன்

3.நிலக்கோட்டை (தனி) - தங்கதுரை

4.திருவாரூர்- காமராஜ்

5.தஞ்சாவூர் -ரெங்கசாமி

6.ஆண்டிப்பட்டி - ஜெயக்குமார்

7.பெரியகுளம் - கதிர்காமு

8.விளாத்திகுளம் - ஜோதிமணி

9.தட்டாஞ்சாவடி - முருகசாமி
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK candidates list anounced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->