நேற்றைய போட்டியில் புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 

இதையடுத்து அடியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அம்பத்தி ராயுடு 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 199 இன்னிங்சில் 6 ஆயிரத்து 086 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 46 அரை சதமும் அடங்கும். 

நேற்று 2 ரன்கள் எடுத்த போது ஷிகர் தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்த போது எந்த  சாதனையை படைத்தார். ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எடுக்கும் இரண்டாவது வீரர் ஷிகர் தவான். விராட் கோலி 207 இன்னிங்சில் 6,402 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 5,764, டேவிட் வார்னர் 5662, ரெய்னா 5,528 அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shikhar Dhawan 6000 ran in ipl


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->