தொடர் வெற்றிகளா குவிக்கறீங்களா..? இந்தியாவின் பாட்சா இனி எடுபடாது... ஏன் தெரியுமா..? தென்னாப்பிரிக்க வீரர் கொடுத்த ஷாக்..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அடித்து தூள் கிளப்போவோம் என்று தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இந்தியா.
 
இந்திய அணியின் தொடர் தோல்வி குறித்து பலரும் விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் முன் வைத்து வருகின்றனர்.

எப்போதும் இல்லாத வகையில் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு கேப்டன் கோலி சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூட சீறினார். அந்த அளவுக்கு இந்த டெஸ்ட் தோல்வி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இது குறித்து தோனி கூறுகையில், இந்தத் தொடரில் இதுவரை நடந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளோம்.

எதிரணியின் அனைத்து விக்கெட்களை வீழ்த்தினால்தான் போட்டியில் வெற்றி பெற முடியும். அப்படித்தான் இந்த போட்டியை நான் பார்க்கிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

இதனால் பேட்ஸ்மேன்களின் பணி தான் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றுத் தொடரைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி வரும் 24ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபடா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தித் தொடரை முழுவதுமாக வெற்றிகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்திய அணி விராட் கோலியை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் ரபடா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mathematical chance of making the title clash if they beat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->