இந்திய அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து மேரிகோம் விலகல்.!! - Seithipunal
Seithipunal


33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ச் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியா அணியின் தலைவராக, 6 முறை உலக சாம்பியனும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்தியா அணியின் தலைவராக செயல்படுவார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த மாதம் அறிவித்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து மேரி கோம்  நேற்று விலகி இருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி டி உஷாவுக்கு எழுதிதிருக்கும் கடித்ததில், " நாட்டுக்காக வேலை செய்வது எல்லா வகையிலும் நான் பெருமையாக கருதுகிறேன் ". அதற்காக நான் மனதளவில் தயாராக இருந்தேன்.

இந்த கௌரவம் மிக்க பொறுப்பில் என்னால் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. தனிப்பட்ட காரணத்திற்காக பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது நாட்டு வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, பி.டி உஷா கூறுகையில்,  மேரி கோம் விலககளை உறுதிப்படுத்தி இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா தனிப்பட்ட காரணத்திற்காக இந்திய அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து மேரிகோம் விலகியது வருத்தமளிக்கிறது. மேரிகோம்மின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம். அவருக்கு பதிலாக அந்த பொறுப்பை யார் நியமிக்கலாம் என்று குறித்து கலந்த ஆலோசனை விரைவில் அறிவிப்போம் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mary Kom steps down as captain of Indian team


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->