இன்று இந்தியா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றப்போவது யார்.? - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணி விவரம்

இந்திய அணி

ஷுப்மான் கில், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி/உம்ரான் மாலிக், முகமது சிராஜ்

  ஆஸ்திரேலியா அணி

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித்(கே), மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி(வி.கீ), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 3rd ODI match today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->