முதலிடத்தை பிடித்து உலக சாதனை படைத்த டோனி....குஷியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.டோனி முதலிடத்தை பிடித்து தற்போது உலக சாதனை படைத்துள்ளார். 

இலங்கை வீரர் குமார் சங்கக்கரா 254 டி-20ல் 133 கேட்ச் பிடித்தது தான் உலக சாதனையாக இருந்தது.

சர்வதேச டி-20 போட்டிகளில் 77 விக்கெட் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ள வகையிலும் கூட 48 கேட்ச், 29 ஸ்டம்பிங் செய்து அவர் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 87 சர்வதேச டி-20ல் அவர் 48 கேட்ச் பிடித்ததும் கூட ஒரு உலக சாதனை தான். 

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

அப்போட்டியில், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் கொடுத்த கேட்ச்சை பிடித்த டோனி,  டி-20 போட்டிகளில் 134 கேட்சுடன் முதலிடத்தை தட்டி சென்றார்.

இதன்மூலம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி முதலிடத்தை பிடித்து தற்போது உலக சாதனை படைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni created world record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->