தந்தை - மகனை வீழ்த்திய ஐந்தாவது பவுலர் தானா அஸ்வின்! மற்ற 4 பவுலர்கள் யார்? லிஸ்ட்ல இவருமா?! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின், சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தியவுடன், தந்தை மகன் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்றார். 

அஸ்வின் முதல் இந்தியர் என்றால், அப்போ உலக அளவில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது இயல்புதான். ஆம், அஸ்வினுக்கு முன்னதாகவே நான்கு பேர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். 

முதன்முதலாக இந்த சாதனையை நிகழ்த்தியவர் இங்கிலாந்தின் ஜாம்பவான் வீரரான இயான் போத்தம், அவர் நியூசிலாந்து அணிக்காக ஆடிய தந்தை மகனான, லான்ஸ் கைர்ன்ஸ் மற்றும் கிறிஸ் கைர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் லான்ஸ் கைர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்திய அவர், பின்னர் அவரது மகன் கிறிஸ் கைர்ன்ஸ் விக்கெட்டை 1990 ஆம் ஆண்டு வீழ்த்தி இருக்கிறார். 

இரண்டாவது வீரராக பாகிஸ்தானின் வசீம் அக்ரம் இருக்கிறார். வசீம் அக்ரம் அதே நியூசிலாந்து தந்தை மகனான லான்ஸ் கைர்ன்ஸ் மற்றும் கிறிஸ் கைர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். 1985 ஆம் ஆண்டு அறிமுகமான வசீம் அக்ரம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லான்ஸ் கைர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். அதன்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனான கிறிஸ் கைர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தி தந்தை மகனை வீழ்த்திய இரண்டாவது பந்துச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். 

மூன்றாவது வீரராக ஆஸ்திரேலியாவின் மிச்சேல் ஸ்டார்க் இருக்கிறார். இவர் அஸ்வின் வீழ்த்திய ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டையே இவரும் வீழ்த்தி இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்திய மிச்சல் ஸ்டாக்,, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தி தந்தை மகன் விக்கெட்டை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். 

நான்காவது வீரராக தென்னாபிரிக்க அணையின் சைமன் ஹார்மர் இடம் பெற்றிருக்கிறார். மற்ற மூன்று வீரர்களும் மிகவும் பிரபலமான வீரர்கள் என அனைவராலும் அறியப்பட்ட வீரர்கள், ஆனால் இவர் சற்று வித்தியாசமானவர். அதிக போட்டிகள் ஆடவில்லை என்றாலும் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்தி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆடிய தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில், ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்திய சைமன் ஹார்மர், கடைசியாக ஆடிய பத்தாவது போட்டியில் அவருடைய மகனான டெக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.

இவர்கள் நால்வரை அடுத்து தான் ஐந்தாவது வீரராக அஸ்வின் இந்த சாதனை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricket Dad Son Wickets list Ravichandran Ashwin only 5th place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->