''ராகு தசா பரிகாரம்''.. கால் 2 ஆம் விரல் நீட்டி இருக்கும் பெண்களா நீங்கள்! இது உங்களுக்குத்தான்.! - Seithipunal
Seithipunal


பெரும்பாலும் ஐ.டி. பணிகளில் இருப்பவர்களுக்கு ராகு திசா நடப்பது வழக்கம். ராகு என்பது யோகக்காரர் என்று அர்த்தம். ஒரே நாளில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதும் சொத்துக்களை இழப்பதும் ராகுவின் விளையாட்டு. 

கால் 2 ஆம் விரல் நீட்டி இருக்கும் பெண்களுக்கு காமத்தில் திருப்தி கிடைப்பது மிகவும் அரிது. இவர்கள் ராகுவின் அம்சம். இவர்கள் கணினி வேலைகளில் படு வேகமாக செயல்படுவார்கள். 

மனித உடல் உறுப்புகளில் பிறப்பு உறுப்பின் செயல்பாட்டினை நிர்ணயிப்பது, அதிரடி மாற்றம் ஏற்படுத்தும். ஒரு வதந்தியை ஒரு நிமிடத்தில் பல லட்சம் பேரை சென்றடைய செய்பவர்கள் ராகுவின் குணநலம் கொண்டவர்கள். 

இதற்கு சுலபமான பரிகாரங்கள் உள்ளது. அதாவது, தினமும் உங்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு ஒருவேளை சென்று வழிபாடு நடத்த வேண்டும். 

வீட்டிலும் வெளியிலும் அசைவம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். யாருக்கு ராகு திசை நடக்கிறதோ அவர்கள் அல்லது அவர்களது ரத்த உறவுகள் வழிபட்டு வருவதோடு வெள்ளிக்கிழமை ராகு காலம் காலை 10.30 முதல் 12 வரையிலான நேரம் மிகவும் முக்கியம். 

அந்த நேரத்தில் எலுமிச்சை பழத்தில் தாமரை தண்டு திரியில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும். ராகுவின் கிழமை ஞாயிறு. அன்று மாலை 5.30 முதல் 6.00 மணிக்கு மேல் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும். 

இவ்வாறு செய்தால் ராகு திசா காலம் முழுவதும் 18 ஆண்டுகள் வரை வழிபட்டு வந்தால் கல்யாண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். 

திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த எல்லோரும் இந்த வழிபாடு செய்து வந்தால் 2,3 ஆண்டுகள் கடந்த பிறகு திருமண வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahu thisa parikaaram in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->