குருபெயர்ச்சி அன்று எந்தெந்த கோவிலுக்கு செல்லலாம்? இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


வரும் மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்தக் குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பொதுவாக குரு பெயர்ச்சியின் போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடக்கின்றன. அதிலும் குருவுக்கென்று தனி தலங்கள் உள்ளன. அதாவது, சென்னை பாடியில் உள்ள வலிதாயநாதர் கோயில், தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில், திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயில், காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், வல்லநாடு கைலாச நாதர் உள்ளிட்ட கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வழிபாட்டால் நன்மை பயக்கும். 

ஆகவே, குரு பெயர்ச்சி அன்று இந்த கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள். அதிலும் இந்த கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gurupeyarchi 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->