எலிக்கு விரித்த வலையில் சிக்கிய எஜமானின் மனைவி : நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மிகப்பெரிய பண்ணையார் ஒருவர் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது.வழக்கம் போல் ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

தனது வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.இதைக் கண்ட எலி ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது.

ஆனால்,அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.இதனைக்கண்ட   எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது...பதறி அடித்துக்கொண்டு   ஒரே ஓட்டமாக ஓடி, வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது.

"நம்ம வீட்டு மொதலாளில் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்றது."இதைக் கேட்ட கோழி கொல்லென சிரித்தது." உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது/

இதனால், மனமுடைந்த எலி,பக்கத்தில் இருந்த வான்கோழியிடம்  சென்று,அதே விஷயத்தை அப்படியே கூறியது. அதை கேட்ட  வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு,எலிப் பொறியால் எனக்கென்ன பயம் என்றது.

ஒருவரும் தனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட பேசாததால் நொந்து போன எலி... அடுத்தாக பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியதோடு,
எலிப்பொறியை கண்டு என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலடித்தது.

பொழுது சாய்ந்தது,அன்று இரவு...எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு...பண்ணையாரும்,பண்ணையாரின் மனைவியும், தூங்கப் போயினர்.

அவர்கள் உறங்க சென்ற அரை மணி நேரத்தில்,, "டமால்" என்றொரு சத்தம்.எலிதான் சிக்கிக்கொண்டது என்று எண்ணிய பண்ணையாரின் மனைவி ஓடிவந்து, எலிப்பொறியைக் கையில் எடுத்தார்.

ஆனால்...எலிப்பொறியில் சிக்கியது எலி அல்ல பாம்பு.பொறியில் பாதி மட்டுமே மாட்டியிருந்த பாம்பு எஜமானியம்மாவை கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும்.. பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி... "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.. சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது.." என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்...

அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்... வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை..... விருந்தாக ஆடும் உயிரை விட்டது.. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். "எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."

    நீதி:அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன..? என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The master's wife who was trapped in the mous net : what happened?


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->