பிறந்தநாள் வீடியோவை வெளியிட்ட தோனி - 30 நிமிடத்தில் 8 இலட்சம் லைக்குகள்.!! - Seithipunal
Seithipunal


பிறந்தநாள் வீடியோவை வெளியிட்ட தோனி - 30 நிமிடத்தில் 8 இலட்சம் லைக்குகள்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனால், அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துகளை குவிந்தது. 

கிரிக்கெட்டில் கீப்பர்- பேட்டர் என்பதை விட அணியின் தலைவன் என்பதில் அனைவருக்கும் தோனி மீது ஒரு தனிவிதமான அன்பு உள்ளது. ஐசிசியின் 3 கோப்பைகளை வென்றதுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார். 

அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு தோனி எப்போதும் ஒரு நெருக்கமான கிரிக்கெட் வீரர். அதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனியை தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். 

சமூக வலைதளங்கள் மற்றும் செல்பேசி போன்றவற்றில் இருந்து ஒதுங்கியே இருக்கும் தோனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இதற்கு முன்னதாகவே தோல்வியிலும் உடன் இருந்தது என்னுடைய நாய்கள் தான் என்று தோனி பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியான 30 நிமிடத்திலேயே 8 இலட்சத்து 77ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு தோனி தெரிவித்ததாவது: "வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளில் நான் என்ன செய்தேன் என்பதற்கான சிறிய க்ளிம்ஸ் விடியோ இது ஒன்று தான் என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni birthday vedio eight lakhs likes in 30 minutes


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->