ரஜினி, கமல் மற்றும் சசிகலாவை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சி?! அதிரடி முயற்சியில் இறங்கும் பிரபல நடிகை!!  - Seithipunal
Seithipunal


முன்னணி நடிகர்களான ரஜினி கமல் ஆகியோருடன் நடித்துள்ள நடிகை விஜயசாந்தி, ஏற்கனவே பாஜகவில் இருந்து தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர், ஜெயலலிதா இறப்பிற்கு முன்பு அடிக்கடி அவரை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

தற்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி, "ரஜினி விரைவாக அரசியலிற்கு வரவேண்டும் என நான் ஆசை கொள்கிறேன். கமல் ஏற்கனவே வந்துவிட்டார். அவரது செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்த போது, நம்பிக்கையான ஆதரவாளர் வேண்டும் என என்னை அதிமுகவில் இணைய அழைத்தார். 

எனது படங்கள் குறித்து நிறைய பாராட்டியுள்ளார். நான் இறுதியாக அவரை சந்தித்த போது, அவரது இரண்டு கால் கட்டை விரல்களும் நகம் நீக்கப்பட்டு, கட்டுப்போட்டு இருந்தது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு என மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்காகவே நான் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தேன். அவர் அதிமுகவில் இணைய அழைத்த பொழுது நான் தெலுங்கானாவிற்காக போராடி கொண்டிருந்தேன். தமிழக அரசியலில் ஈடுபட நான் தயாராக இல்லை.

எனவே, நான் இருக்க வேண்டிய இடத்தில் ஓபிஎஸ் இருந்தார். சசிகலாவுடனும் எனக்கு நட்புண்டு. ஆனால், அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனது நண்பர் என்ற ரீதியில் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்தேன். 

அதனால், தான் அவரது கணவரின் மறைவிற்கும் சென்று வந்தேன், சசிகலாவிற்கு ஜெயலலிதா மரணத்தில் தொடர்பு இருப்பதாக அவதூறு பரப்புகிறார்கள்." என கூறியுள்ளார். 

இவ்வாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயசாந்தி திடீரென அதிமுக கூட்டணியில் இல்லாத அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆதவளிக்கும் விதமாக பேசுவது மற்றவர்களை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சி தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayshandhi says about sasikala, rajini, kamal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->