நான் பேசுரது நல்லவங்களுக்கு மட்டும் தான் புரியும் : விஜயகாந்த் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ரேசன் கடைகளில் விற்பனை செய்து வரும் சர்க்கரையில் விலையை 13.5 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தலைமையில், ஏராளமான கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் பங்கேற்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:

நான் பேசுவது உங்களுக்கு புரிகிறதா? என்னுடைய பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு மட்டும் தான் புரியும். எடப்பாடி போன்றோருக்கு புரியாது.

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது போன்று, எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும்.

ரேசன் கடைகளில் விற்கப்படும் பொருட்களை ஏழை மக்களே வாங்கி பயன்பெற்று வருகின்றனர். அப்படி இருக்கும் போது ஒரே நேரத்தில் சர்க்கரை விலையை 25 ரூபாயாக உயர்த்தியது மிகப்பெரிய தவறு. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை 5 ரூபாய் விலையை உயர்த்தலாம்.

ரேசன் கடைகளில் தடை செய்யப்பட்ட மசூர் பருப்பை விற்கிறார்கள். அவற்றை அமைச்சர்கள் வாங்கி பயன்படுத்துவார்களா? மக்களுக்கு விற்பது பெரிய தவறு என்றார்.

அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர். பின்னர், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth condemns TN Government about sugar price rise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->