#BreakingNews திருவாரூர் இடைதேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த டி.டி.வி.தினகரன்!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில், இன்று நண்பகல் 12 மணிக்கு காவேரி திருமண மண்டபத்தில், திருவாரூர் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அமமுகழகத்தின், துணை பொதுச்செயலாளர், டி.டி.வி.தினகரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில், அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மாவட்ட கழக செயலாளருமான திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள் மற்றும் கழகத்தின் தலைமை நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், என திரளானோர் கலந்து கொண்டனர்.

இடைத்தேர்தலுக்கான பணிகள் மற்றும் களப்பணி, பிரச்சாரம் குறித்தும் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.மேலும், இந்த கூட்டத்தில், தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கபட்டது.

இந்நிலையில், இன்று அக்கூட்டத்தில் பங்கேற்ற தினகரன் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து விளக்கினார். இதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளராக, எஸ்.காமராஜ் அவர்களை அறிவித்துள்ளார்.

இதனால், உற்சாகமான தொண்டர்கள் அதே உற்சாகத்துடன் தேர்தல் பணிகள் செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. திருவாரூர் திமுகவின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே, நடைபெற்ற ஆர்.கே. நகர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தினகரன் சுயேட்ச்சையாக ஜெயித்தது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran announced MLA candidate of thiruvar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->