வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 21 ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்!! - Seithipunal
Seithipunal


திருத்திய வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழக வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த செப்டம்பர் 1 தேதி தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் முகாம் கடந்த செப்டம்பர் 9 , 23 மற்றும் அக்டோபர் 7, 14-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருத்திய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு  தெரிவித்து இருந்தார். ஆனால்,  வாக்காளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வலைதளம் மூலம் 10 லட்சம் இரட்டை பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதை நீக்கும் பணிகள் நடைபெறுவதால் கால அவகாசம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது. இதை நீக்கிய பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவித்தது. 

இந்நிலையில், திருத்திய வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 21 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The final list of revised voters - Election Commission has announced.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->