என்னது.! தேர்தலுக்கு பிறகு விலை குறைக்கப்படுமா? பிரசாரத்தில் கனிமொழி எம்.பி உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அது போல் கனிமொழி எம்.பி தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். 

கனிமொழி எம்.பி. இந்தியா கூட்டணி சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, பொதுமக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தி சம்பளமும் உயர்த்தப்படும். 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை குறைக்கப்படும். இதனால் மற்ற பொருட்களின் விளையும் குறையும் என தெரிவித்துள்ளார். 

இந்த பிரச்சாரத்தின் போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொருளாளர், வடக்கு மாவட்ட செயலர், வர்த்தக அணி அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், நகரச் செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Kanimozhi MP campaign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->