தமிழகத்தில் மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளின் விபரங்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் தமிழகத்தில் மாலை சுமார் 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதுமாக 63.73 விழுக்காடு வாக்குப்பதிவும்., புதுவையில் 76 விழுக்காடு அளவிற்கும்., சிதம்பரத்தில் 70.73 விழுக்காடு அளவிற்கும் பதிவாகியுள்ளது. 

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் சுமார் 55.07 விழுக்காடு அளவிற்கு வாக்குப்பதிவும்., திருச்சியில் 62.60 விழுக்காடு அளவிற்கும்., காஞ்சிபுரத்தில் சுமார் 62.09 விழுக்காடு அளவிற்கும்., சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் சுமார் 67.78 விழுக்காடு அளவிற்கும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu till now voting percentage election chief announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->