தமிழ்நாடு கஞ்சா போதையில் மிதக்கிறது -அன்புமணி ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதனால், அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில்  பாமக சார்பில் போட்டியிடும் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நான்கு தலைமுறையாக தமிழ்நாட்டு மக்களை போதைக்கு அடிமையாக வைத்துள்ளனர் திராவிட கட்சிகள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை பொருள்கள் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை சாக்லேட்டுகள், அமெரிக்கா போதை மருந்துகள் பள்ளி மாணவர்களிடையே புழக்கத்தில் உள்ளது. கடந்த தலைமுறைகளில் சாராயத்துக்கு அடிமையானது போல் இந்த தலைமுறை இளைஞர்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகி வருவது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பேசினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu drug state anbumani speech


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->