1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.! ஆய்வுக்குப்பின் தமிழக முதல்வர் அதிரடி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நாகப்பட்டினம்., திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோர தாண்டவம் ஆடிய கஜாபுயலின் தாக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை.

இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து., விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து., வரும் காலத்தில் எந்த வேலை செய்து பிழைக்கப்போகிறோம் என்ற கவலையில் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம்., தன்னார்வலர்கள் மற்றும் உதவிமனப்பான்மை கொண்டவர்கள் செய்து வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதிக்கு நேற்று இரவு சென்னையில் இருந்து காரைக்கால் விரைவு இரயில் மூலமாக நாகபட்டினத்தை தமிழக முதலவர் சென்றடைந்தார். இன்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்வர், அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

மேலும், கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தபின் தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, சில புள்ளி விவரங்களை தெரிவித்தார், அதில், ''கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்கை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர், ''தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும், மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILNADU CM EDAPADI SPEECH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->