#TheKerakaStory:: விஸ்வரூபம் போல இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும்..!! - எஸ்.பி வேலுமணி அதிமுக..!! - Seithipunal
Seithipunal


தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி பின்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து பயிற்சி அளிக்கப்பட்டு இந்திய நாட்டிற்கு எதிராக செயல்படும் வகையில் கதைகளத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இந்த திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்தை தவிர பிற மாவட்டங்களில் 27 தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியானது.

சென்னையில் மட்டும் 13 தியேட்டர்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு நிர்வாகம் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி வேலுமணி விஸ்வரூபம் திரைப்படம் போன்று இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் காட்சிகளை நீக்கிவிட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திமுக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது "சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்திற்கு இஸ்லாம் ஜமாத் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எந்த படமும் எந்த மதத்தையும் புண்படுத்த கூடாது என்பதால் தான் கடந்த அதிமுக ஆட்சியில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய அமைப்புகள் குறித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதே போன்று தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரும் குறிப்பிட்ட பட காட்சிகளைத் தற்போது உள்ள திமுக அரசு நீக்கிவிட்டு வெளியிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP Velumani asked remove Islam offend scenes from the Kerala Story


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->