இதெல்லாம் மக்களுக்கு யார்தான் விளக்குவதோ? காங்கிரஸ், பாஜக குறித்து அதிரடி பதிவை வெளியிட்ட பிரபல இளம்நடிகர்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில்,இந்த தேர்தலில் வெற்றியை நிலைநாட்டிக்கொள்ள தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடி சென்னையில் உரையாற்றினார். அப்பொழுது அவர் புல்வாமா தாக்குதல் குறித்தும், தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது தொடர்பாகவும் பேசினார். அதனை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்பி விவகாரம் குறித்தும் பேசியுள்ளார்.

 அப்பொழுது மோடி  அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்து இரண்டு நாட்களில் பாதுகாப்பாக மீட்டு வந்தோம் என்பது உலகிற்கே தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் முன்னரே காஷ்மீர் புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்பிய விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது  என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியது.

இந்நிலையில் இதுகுறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மகாத்மா காந்தி விருப்பத்திற்கு மாறாக, சுதந்திரத்திற்குப் பிறகு அவரது பெயரை காங்கிரஸ் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டதோ அதே போல புல்வாமா மற்றும் அபிநந்தன் நாடு திரும்பியதை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. காந்திஜி காங்கிரஸ் அல்ல. அதேபோல் பாஜக நமது ராணுவமும் அல்ல. மக்களுக்கு இதை யார் தான் எடுத்துக் கூறுவார்களோ?  இந்தியா பொய்களை எதிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

siddharth tweet about bjp and congress


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->