ஆ..ஊ..னா அடிச்சுக்குவோம்.. அரசியல்னா அணச்சுக்குவோம்... இதுதான் ஸ்டாலின் அரசியலா..? - Seithipunal
Seithipunal


செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் சில வருடங்களுக்கு முன்னர் அவரை இகழ்ந்து பேசிய பதிவு சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அரவக்குறிச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் செந்தில்பாலாஜி. கடந்த சில நாட்களாக தினகரனுடன் மோதல் போக்கை செய்துவந்தார். 

தற்போது செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளது அதிமுக மற்றும் அமமுக கட்சியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. வரும் 16ஆம் தேதி நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டநிலையில், அதற்கு முன்னதாகவே திமுகவில் இணைந்துள்ளார்.

செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததை இன்முகத்துடன் ஸ்டாலின் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், அதே நேரத்தில் பல இடங்களில் இகழ்ந்தும் பேசியுள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் முகநூல் பதிவில்,

இன்று கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டேன். தலைவர் கலைஞர் அவர்களை 1957 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்து முதன்முறையாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த குளித்தலை தொகுதிக்குச் சென்றது மனதில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேநேரத்தில் இன்றைக்கு இரக்கமற்ற சிலரையும் கரூர் மக்கள் தேர்வு செய்ததை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டேன். தன்னுடைய கல்லூரியில் கரூர் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதாக வாக்குறுதி அளித்து எம்.பி. ஆன தம்பிதுரை அதன் பிறகு கரூர் மக்களை ஒரேயடியாக மறந்து விட்டார்.

அதேபோன்று கேபிள் டிவி ஊழல், நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் இந்த தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனது பிரச்சாரத்தில் இதையெல்லாம் எடுத்துரைத்ததுடன், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மதுவிலக்கு அமுலுக்கு வரும் என்று உறுதியளித்தேன்.

கடந்த ஐந்தாண்டுகால அதிமுக ஆட்சியில் நாம் அனைவரும் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டு விட்டோம். தமிழக மக்கள் இம்முறை சரியான அரசை உருவாக்க இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்வார்கள் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். முடியட்டும், விடியட்டும்' என்று அதில் கூறியிருந்தார்.

இதனை பலரும் முகநூலில் பதிவிட்டு, அன்று ஊழல் செய்த செந்தில் பாலாஜி மீது  ஸ்டாலின் தாக்கு.. இன்று திமுக வில் செந்தில் பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் இணைவு' என்ற ஹாஸ்டாக் கொண்டு பகிர்ந்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthi balaji stalin controversy speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->