இப்படிப்பட்டவர்கள் எனக்கு தேவை இல்லை.,கட்சியிலிருந்து தூக்கிய ஆன்மீக தலைவர் ..! - Seithipunal
Seithipunal


சென்னை : திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜ் சுயநலத்தோடு செயல்பட்டதால் மன்றத்திலுருந்து நீக்கப்பட்டதாக அந்த மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் விளக்கம் அளித்துள்ளார். 
 

இந்நிலையில் தம்புராஜ் நீக்கப்பட்டதற்கான காரணங்களை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : ரஜினி மக்கள் மன்றம் தூய்மையான அரசியலை முன்னிறுத்தி பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக  தொடங்கப்பட்டுள்ள அமைப்பு. இதில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் குறிக்கோளுக்கு ஏற்ப செயல்படவில்லை எனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ,மன்றத்தை சரியான பாதையில் நடத்திச்செல்வது எங்களது கடமையாகும். 

    

தம்புராஜ் தலைமைக்கு விரோதமாக செயல்பட்டார், அவர் பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக மட்டும் செயல்பட்டார்.அவர் செய்தது தலைமைக்கு விரோதமானது என்றாலும் அவரை தற்காலிகமாக நீக்கவும், தம்புராஜ் தவறை உணரும் வரை வேறு யாரையும் அந்த பொறுப்பிற்கு நியமிக்கக் கூடாது என்றும் ரஜினி அறிவுறுதியுள்ளார். 

                             

ஆனால், தம்புராஜ் தவறை உணராமல், நிர்வாகிகளை தூண்டிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து அவதூறு பரப்பி மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றார். அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.
 எனவே ரஜினிகாந்தால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட மன்ற நிர்வாகிகள் அனைவரும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நியாயம் செய்யும்வகையில் செயல்பட வேண்டும்,என  சுதாகர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

i dont need that type of people in my party said rajinikanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->