மீண்டும் ட்விட்டரில் பரபரப்பை கிளப்பிய ஹெச்.ராஜா..!! விடாமல் விஜய்யை துருவ காரணம், இது தானா..? - Seithipunal
Seithipunal


இந்நிலையில் அவர் மீண்டும், நடிகர் விஜய் குறித்து அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பேஜில் பதிவிட்டுள்ளார் என்பது குறிபிடதக்கது

கடந்த அக்டோபர் 19-ம் தேதியன்று ஹெச்.ராஜா பதிவிட்டிருந்தது பின்வருமாறு..

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி, கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல் என பதிவிட்டிருந்தது ஊருக்கே தெரியும்

அதைத் தொடர்ந்து 'மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்' என்று தனியார் சேனலில் உளரவே, இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது..பின்னர் சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகளைத்தான் பார்த்தேன் என்று மழுப்பினார்..

மேலும், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி என பலரும் மெர்சல் குறித்து தொடர் கருத்துகளை தெரிவிக்கவே, இந்த விஷயம் இந்திய அளவில் வைரலானது..மெர்சல் படம் அனைவரையும் சென்றடைய இவர்களே முக்கிய காரணம் என்றால் மிகை இல்லை..

இந்நிலையில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா அவர்கள் பதிவிட்டது இதோ..

உண்மை கசக்கும் என்று ஹெட்டிங் போட்டு, விஜய்யின் வாக்காளர் அட்டைப் போன்ற ஒன்றையும் விஜய் சார்பில் முன்னர் வெளியிட்ட அறிக்கை போன்ற ஒன்றையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது...
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raja twit against vijay for mersal movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->