''புள்ளி ராஜா'' வாகினார் தமிழக அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசியல் காட்சிகளில் இருக்கும் தலைவர்கள் எப்போதும் கடுமையானவர்களாக இருப்பதில்லை, அவர்களுக்குள் கலகலப்பான பல உரையாடல்கள் அதிகம் இருக்கும், கட்சியின் கொள்கை, கோட்பாடு அனைத்தையும் தாண்டி அவர்களுக்குள் பல உரையாடல்கள் உள்ளது. நம்மை போன்று தான் அவர்களும், சாதாரண மனிதனுக்கு உள்ள குடும்பம், பிரச்னை, நல்லது, கேட்டது, சோகம், மகிழ்ச்சி, வறுமை, துயரம், துக்கம் என்று அனைத்தையும் கலந்தது தான் அவர்களின் வாழ்க்கையும்.

தெர்மகோலை வைத்து இணையத்தில் அதிகம் கிண்டல் செய்யப்படும் அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்கள் சமீபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து பேசும் போது, தயவு செய்து மக்கள் சாலை விதிகளை பின்பற்றுங்கள், சாலையில் நீங்கள் பயணிக்கும் போது கவனமாக இருங்கள். உங்கள் ஒரு உயிர் விலைமதிப்பற்றது. என் மகனை சாலை விபத்தில் பறிகொடுத்த வேதனையில் இதனை உங்களுக்கு கூறுகிறேன்'' என்று தெரிவித்திருந்தார். இது பலரையும் மனதளவில் பாதித்தது.

இது போன்று பல அரசியல் கட்சி பிரமுகர்களின் வாழக்கையில் நமக்கு தெரியாத சோகங்கள் உள்ளன. அதேபோல் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் உரையாடலில் போற்றுதலும், தூற்றுதலும் வழக்கமான ஒன்று. 

இதுபோல், தேனியில் பள்ளி ஒன்றின் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பேசுகையில், தமிழக அரசின் வரி வருவாயில் நான்கில் ஒரு பங்கு கல்விக்காக செலவிடப்படுகிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், தமிழ் வளர்ச்சி மற்றும் ஆட்சி மொழி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குறித்து பாராட்டி பேசினார்.

அதில், தமிழ் வளர்ச்சி மற்றும் ஆட்சி மொழி துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் இந்த துறையில் சிறந்து செயல்பட்டு வருவதாகவும், புள்ளி விபரங்களை அல்லி வீசுவதில் அவர் புலி என்று தெரிவித்த ஓபிஎஸ் அவர்கள். அவரைப் ‘புள்ளி ராஜா’ என்றே அழைக்கலாம் என்று புன்னகையுடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கு பட்டம் சூட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops open talk about tn minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->