இறங்கி வந்த சசிகலா.. ஓடி சென்ற ஓ.பி.எஸ்.. புயல் கிளப்பிய திடீர் சந்திப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்து காரில் கிளம்பியபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் காரில் வந்தார்.

சசிகலா வருவதை கவனித்த பன்னீர்செல்வம் காரில் இருந்து இறங்கிச் சென்ற போது கண்ணாடியை இறக்கிவிட்டு பேசிய சசிகலா, பின்னர் காரில் இருந்து இறங்கி ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்தார்.

இருவரும் சில நிமிடங்கள் பேசிய பின்னர் ஓபிஎஸ் அருகே நின்ற வைத்திலிங்கத்திடமும் நலம் சசிகலா விசாரித்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் வாய்ப்பு கிடைத்தால் சசிகலாவைசந்திப்பேன் எனக் கூறியிருந்தார்.

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் சந்திக்காமலேயே இருந்த நிலையில் இன்று இருவரிடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்பு யதேச்சையாக நடந்திருக்க வாய்ப்பில்லை என‌ முனுமுனகின்றன அரசியல் வட்டாரங்கள்.

 

இதற்கு‌ காரணம் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ஒரே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருந்த‌போது ஓபிஎஸ் அங்கிருந்து கிளம்பும் வரை சசிகலா தனதுகாரில் இருந்து இறங்காமலேயே காத்திருந்தார். 

ஆனால் தற்போது மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் இருவரும் நேருக்கு நேர் இன்று சந்தித்துப் பேசி இருப்பது  அரசியல் வட்டாரத்தில் புயலை‌ கிளம்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops met sasikala near anna memorial today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->