ஓபிஎஸ்-க்கு மீண்டும் பேரிடி.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் சொல்லும் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவின் கோடி சின்னம் மற்றும் லெட்டர் பேடை பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இல்ல மேல்முறையீட்டு மனுவானது சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமீர் வழங்கிய தீர்ப்பில் அ.தி.மு.கோடி சின்னத்தை பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததோடு ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஓபிஎஸ் அணியினருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பேரிடியாக விழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops appeal petition disposed by madras high court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->