#BREAKING || பெங்களூருவில் ஜூலை 17, 18ல் எதிர்க்கட்சிகளில் ஆலோசனை கூட்டம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு காரணம் நேற்று மகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த ஒரு தரப்பு எம்எல்ஏக்கள் அஜித் பவார் தலைமையில் ஆளும் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசில் இணைந்ததோடு அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 9 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியது தான் காரணம் என தகவல் வெளியானது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பாட்னாவில் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து எதிர்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, அடுத்த கூட்டத்தை பெங்களூருவில் 2023 ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளோம். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாசிச மற்றும் ஜனநாயக விரோத சக்திகளைத் தோற்கடிப்பதற்கும், தைரியமான பார்வையை முன்வைப்பதற்கும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

காவிரி நதி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்திற்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக தரப்பிலிருந்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது திமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் யாரேனும் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties consulting meeting on July 17 18 in bengaluru


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->