ஜெயலலிதாவின் சேலை இழுத்தவர்கள்.. திரௌபதி பற்றி பேசலாமா.? கொந்தளித்த நிர்மலா சீதாராமன்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 

இந்த தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விவாதத்திற்கு எடுத்துக் கொண்டதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று திமுக சார்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகாபாரதத்தையும் திரௌபதியையும் மேற்கோள் காட்டி பேசி இருந்தார்.

இந்த நிலையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகாபாரதத்தில் வரும் திரௌபதி குறித்து பேசி இருந்தார். மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்த கட்சி திமுக. அவரை அவமானப்படுத்திவிட்டு எல்லாரும் உட்கார்ந்து சிரித்தார்கள்.

அன்று சட்ட சட்டப்பேரவையில் ஒரு உறுதிமொழி எடுத்துவிட்ட வெளியேறினார். நான் மீண்டும் முதல்வராக தான் வருவேன் என சப்தம் எடுத்தார். அதன் பிறகு அவர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் முதல்வராக சட்டப்பேரவைக்கு வந்தார். அன்று ஆளுங்கட்சியாக அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவரின் புடவை பிடித்து இழுத்துவிட்டு இன்று திரௌபதியை குறித்து பேசுவதை என்னால் நம்ப முடியவில்லை" என திமுக எம்பி கனிமொழியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala criticized who grabbed Jayalalitha saree talking about dhraupadi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->