மோடி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நாளை 26ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி இடஒதுக்கீடு குறித்தும் இஸ்லாமியர் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையானது. இதனை அடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப்பெருந்தகை சத்தியபவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், பாஜக மதரீதியாக மக்களிடையே பிரிவு ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார். இதனை, தமிழக காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

பிரதமர் மோடியின் பேச்சை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் மோடியை எங்கையும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் செயல்படுபவருக்கு எப்படி தடை விதிக்கப்படுகிறதோ, அப்படி மோடி பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும்.!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi election propaganda not allowed Election Commission


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->