இன்னும் கொஞ்ச நேரம் தான்! சம்பிரதாயங்களை முடித்து சவாலுக்கு தயாரான முக ஸ்டாலின்! உணர்ச்சி பொங்க காத்திருக்கும் திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


திமுக, அதிமுக கூட்டணி பேச்சுகள் முடிவுற்றுது. தொகுதி பங்கீடு செய்து கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. தொகுதிகளின் இறுதி பட்டியல் வெளியாகிவிட்டது. வேட்பாளர்களின் பட்டியலை கூட சிறு சிறு கட்சிகள் வெளியிட்டுவிட்டன. அதிக தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக அறிவித்து உள்ளன. 

அதிமுக கூட்டணியில், அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, தமாகா 1, என் ஆர் காங்கிரஸ் 1, புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில், திமுக 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, ஐஜேகே 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை ராகு காலம் முடிந்த பிறகு திமுக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக திமுகவின் வேட்பாளர் பட்டியலை கலைஞர் நினைவிடத்தில் வைத்துவிட்டு வணங்கி, பிறகு பொதுச்செயலாளர் அன்பழகனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

கலைஞர் இல்லாத, பொதுச்செயலாளர் செயல்பாட்டில் இல்லாத நிலையில் முதன்முறையாக சவாலுக்கு தயாராகி உள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின். சாதிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN READY TO ANNOUNCE CANDIDATE FOR MP ELECTION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->