#BREAKING முடிந்தது கதை.! சற்றுமுன் முடித்து வைத்த முக ஸ்டாலின் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி யார் யாருடன் வைக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக தலைமையில், அதிமுக, பாஜக, பாமக, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து மெகா கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில், பாமக-விற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மேலும் சில கட்சிகளும் இணைய உள்ளது. இதில் தேமுதிக உடன் இழுபறி நிலை இருந்து வருகிறது.

இதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும், தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து சுமுகமாக முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வர மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு, நண்பகல் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் வந்துள்ள வைகோ அவர்கள் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதேபோல், விடுதலை சிறுத்தைகளும் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை கேட்டுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளன.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியதும் தமிழக அரசியலில் பரபரப்பு உண்டாக்கியது. 

விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்தபின் முக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியில், ''உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்களை நலம் விசாரிக்கவே வந்தேன். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. தலைவர் கருணாநிதி இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத விஜயகாந்த் அவர்கள் கண்ணீர் மல்க அவரது நினைவிடத்தில், உடல்நிலை சரியில்லாத அந்த நேரத்திலும் அஞ்சலி செலுத்தியது நம் கண்முன் இன்று வரை உள்ளது. 

அந்த வகையில் அவர் உடல்நிலை சரியில்லாத போது நான் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர் ஒருவர் திமுக-தேமுதிக கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த ஸ்டாலின், உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் என்று சிரித்துக்கொண்டே ஸ்டாலின் புறப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN PRESS MEET ABOUT VIJAYAKANTH MEET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->