#சற்றுமுன் : திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்.!  - Seithipunal
Seithipunal


திமுகவின் உட்கட்சித் தோ்தல்கள் நடைந்து முடிந்த நிலையில், 71 மாவட்டச் செயலாளா் பதவியில், 64 மாவட்ட செயலாளா்கள் பதவியில் மீண்டும் அதே நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில் 7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் தான் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, தி.மு.க. தலைவா், பொருளாளர், பொதுச் செயலாளா் உள்ளிட்ட பதவிகளுக்காக வரும் அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கின்ற பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கின்றது. 

இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா் ஆகியோர் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 

இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் போட்டியின்றி 2- வது முறையாக மீண்டும் அவரே திமுக தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk Stalin Nomination for DMK Leader


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->