கட்சி தொடங்குவது உறுதி., தந்தை மறுப்பு தெரிவித்தால் என்ன,? நான் சொல்லுகிறேன்.!! துரை தயாநிதி அதிரடி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கருணாநிதி ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் முக அழகிரி, கருணாநிதியின் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். 
  
இதன் பின், மதுரையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் முக அழகிரி ஆலோசனை  நடத்தினார். அதன் பின் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ந்தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அந்த பேரணியில் தனது ஆதரவாளர்கள் 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து, செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 11 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

இதனைதொடர்ந்து, கருணாநிதி எழுச்சி பேரவை என்ற பெயரில் முக அழகிரி தனியாக அமைப்பை ஒன்றை தொடங்குகிறார் என்று முக அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து  நேற்று தெரிவித்தார். 

இந்நிலையில், மு.க. அழகிரி தனி அமைப்பு துவக்கப்போவதாக நேற்று வெளிவந்த செய்தியை அவரது மகன் துரை தயாநிதி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 

இன்று,  உசிலம்பட்டியில் துரை தயாநிதி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து. அதேநேரம், அதற்கான ஆலோசனைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது என துரை தயாநிதி தெரிவித்தார்.

English Summary

MK Alagiri Son Press Meet

செய்திகள்Seithipunal