முதலமைச்சர் கூறுபவரே மத்தியில் பிரதமர்... பரபரப்பு கிளப்பிய உதயநிதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசி இருப்பதாவது, கொரோனா பெருந்தொற்று இரண்டாவதாக பிரதமர் நரேந்திர மோடி உங்களை சந்திப்பாரா? தொலைக்காட்சியில்  பேசுவார். 

அவ்வளவுதான் அப்போது அவர் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வீட்டை போட்டுக் கொண்டு உள்ளே இருங்கள் வேலைக்கு போகாதீர்கள் என தெரிவித்தார். 

வெளியே வந்து விளக்கேற்றுங்கள் கையில் தட்டு வைத்து சத்தம் எழுப்புங்கள். இதன் மூலம் கொரோனா ஒழிந்து விடும் என தெரிவித்து மக்களை ஏமாற்றினார். 

10 வருடம் ஆண்ட பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை தமிழ்நாட்டில் வந்துள்ளார். இப்போது 10 தினங்களாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். எல்லாம் தேர்தல் தோல்வி பயம் தான் நான் சவால் விடுகிறேன். 

10 நாள் அல்ல ஒரு மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் மத்திய பிரதமராக மு.க. ஸ்டாலின் கூறுபவரே பிரதமர் ஆவார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Udayanidhi Stalin speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->