மீண்டும் வாயை விட்டு மாட்டிக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு .! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!! இந்த முறை அமைச்சர் செல்லூர் ராஜு என்ன கூறினார் தெரியுமா.?!! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, அவ்வப்போது நெட்டிசன்களுக்கு தீனி போடும் அளவிற்கு, அறிவிப்புகளை அள்ளி வீசுவார். அதே போன்று, ஒரு சில நேரங்களில், சிரிப்பு வரவழைக்கும் விதமான செயல்களையும் செய்வார். வைகை ஆற்றில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க, தெர்மோகோல் வாங்கி ஆற்று நீரை மூடியதால், இவர் நெட்டிசன்களால்தெர்மோகோல் ராஜு என்ற சிறப்பு பெயரை பெற்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள், "இளைஞர்களே, கட்சிப் பணியாற்றும் உங்களுக்கு அரசு வேலைக்கு இன்டர்வியூ வந்தால் அதைப் பெற்றுத்தர கட்சி முழுமையாக  முயற்சி செய்யும் , ஆகையால் உற்சாகமாக கட்சிப் பணியாற்றுங்கள்" என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும், டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதவேண்டும், நேர்கோணலில் கலந்து கொள்ள வேண்டும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டும் என்று தான் இதுவரை நடந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 'அப்புறம் எதுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம், அந்த நேர்காணல் கடிதத்தையும் கட்சி அலுவலகத்தில் இருந்தே அனுப்பலாமே', எனவும், அரசுப் பணியானது கட்சியில் உள்ளோருக்கு மட்டுமே என்று சொல்லாமல் சொல்கிறார். அவர்களுக்காவது பணியை பணம் வாங்காமல் இலவசமாக வழங்க வேணும் எனவும், அவரின் பேச்சுக்கு ட்வீட் செய்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sellur raj once again controversy speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->