தனியாகத் தான் குதிக்கப் போகிறோம்….! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி….! - Seithipunal
Seithipunal


 

ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே. நகர் தொகுதியில், நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆளும் கட்சியான அதிமுக, அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, வந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் தேதியைக் கூட தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் மீதான தீர்ப்பு வெளியானதால், தற்போது, தமிழகத்தில், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வர உள்ளது.

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்ர் ஜெயக்குமார், “ஐந்து மாநிலத் தேர்தல் முடிவினை வைத்துக் கொண்டு, எதையும் தீர்மானமாகச் சொல்லி விட முடியாது. மக்கள் மனது மிகவும் ஆழமானது. அவர்கள், எந்த சூழ்நிலையில், என்ன முடிவெடுப்பார்கள்? என்பது, அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

நாங்கள் பலம் வாய்ந்த கட்சியாகத் தான், தற்பாது திகழ்கிறோம். எனவே, வரப்போகிற, பாராளுமன்றத் தேர்தலில், யாருடனும் கூட்டணி வைக்காமல், தனித்தே போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தினகரனுடன் ஒரு நாளும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்” என்று அவர் பேட்டி அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jayakumar's statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->