ராகுலின் யாத்திரைக்கு ஆப்பு வைத்த மம்தா.!! முற்றுகிறது காங்கிரஸ்-திரிணாமுல் மோதல்.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில்  அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிடையே மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டாதால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி பயணத்திலும் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதார் ரஞ்சன் சவுதிரியே காரணம் என குற்றம் தட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் கடந்த 25 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நுழைந்தது. ராகுல் காந்தி இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் மேற்கு வங்கத்தில் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நடைபெற இருந்த பொதுக் கூட்டங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் "பேரணி போது பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி கேட்டிருந்தோம் ஆனால் மேற்கு வங்கத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதால் அனுமதி தர மாநில நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால் சிலிகுரியில் சாலை முழுவதிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ராகுலின் நீதியாத்திரை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata not permit Rahul foot path in west bangal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->