ஓபிஎஸ்-க்கு இடி மேல் இடி.. சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் கூடி சின்னம் மற்றும் லெட்டர் பேட் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தொடந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஓபிஎஸ் அதிமுகவின் கொடி சின்னம் லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு உறுதி செய்தது. 

வேட்பு மனு தாக்கல் நாளில் இந்த தீர்ப்பு வெளியானது ஓபிஎஸ் இன் நெஞ்சில் இடையே இறக்கியது போல இருந்த நிலையில் தற்போது சொத்து குறிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டதை மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc refused ops request in Asset Accumulation Case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->