எங்கள் மீது தவறு இல்லை... அவர் தேவை இல்லாமல் போராட்டம் நடத்துகிறார்! பினராயி விஜயன்! - Seithipunal
Seithipunal


சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைதடுத்து அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. 

கடந்த வாரம் சபரிமலை கோயில் இரு மண்டல பூஜைக்காகவும், மகர விளக்கு பூஜைக்காகவும் கோவில் நடை திறக்கப்பட்டது. 

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து இருமுடிக்கட்டுடன்  இரண்டு நாட்கள் முன்தினம் கோவிலுக்கு சென்றார். ஆனால் நிலக்கல் பகுதியில் அவரை தடுத்து நிறுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா பொன். ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்துள்ளார்.

இதனால். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் கேரள காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, களியக்காவிளையில் கேரள அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. 

மேலும் இந்த முழு அடைப்பால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேரள காவல் துறை அதிகாரிகள் அவமரியாதையுடன் செயல்படுவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலக்கல் பகுதிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வந்தபோது, அவரது காருடன் மற்ற கார்களை பம்பை வரை அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் கூறியதாக தெரிவித்தார். காவல் துறை அதிகாரிகளை இந்துத்துவா மற்றும் பாஜகவினர் அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், சபரிமலையில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது மட்டுமே காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari protest in bjp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->