எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க... - மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கனிமொழி எம்.பி.! - Seithipunal
Seithipunal


தி.மு.க துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், 

ஏழை எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவு தேர்வு கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கின்றனர். ஆதிக்க சக்தியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதை தடுக்க நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 

எல்லோருக்கும் சமமான கல்வி தருவதற்காக இந்தியா கூட்டணி பாடுபடுகிறது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை வழங்கி வருகிறார். 

இதுவரை வழங்கப்படாத பெண்களுக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்தூர் கோவிலில் அரசின் சார்பில் ரூ. 100 கோடி, தனியார் பங்களிப்பாக ரூ. 200 கோடி என திருப்பதி கோவிலை விட மேலாக சாமி தரிசனம் செய்வதற்கு தரம் உயர்த்த பணிகள் நடைபெறுகிறது. 

திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

வருகின்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi MP request vote India alliance


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->