திமுக அமைச்சர் எ.வ வேலு வீட்டில் ஐ.டி ரெய்டு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் அவர் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6:30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையில் டி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ வேலு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நடத்தி வரும் நிலையில் அதில் வரும் வருமானங்களை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதே போன்று திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, வீடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் எ.வ வேலு வீட்டில் மட்டும் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ வேலு தற்போது திருவண்ணாமலை உள்ள வீட்டில் இருப்பதால் அங்கு சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Itraid in DMK Minister ev velu related places


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->