முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Seithipunal
Seithipunal


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

Image result for bjp in india

ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய  வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.

Image result for modi waves

இந்த சுழுநிலையில்  பாஜகவிற்கு அம்மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கேள்விக்குறியாகவே  உள்ளது. கள ஆய்வாளர் சோனல் வர்மா மற்றும் நோவ்முரா ஹோல்டிங்ஸ் அமைப்பு நடத்திய கருத்துகணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ்க்கு ஆதரவு அதிகமாக உள்ளதாம்.கர்நாடகாவில் ஏற்கனவே பாஜக ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில்   ஒருவேளை வரும் தேர்தலில்  தோற்றால்  பாஜக தொண்டர்கள் மனத்தளவில்  பலகீனமடைவார்கள்.

Related image

இதனை தடுக்க கர்நாடக பாஜகவினர் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை கர்நாடாவில் 7 .5 லட்சம் புதிய வாக்காளர்களை பாஜக இணைத்துள்ளனராம். அதுமட்டும் இன்றி பிரச்சாரத்துக்கு ஒரு பெரிய நச்சத்திர படலத்தையே இறக்க முடிவு செய்துள்ளது.மேலும் கிராமப்புறங்களில் பாஜக விவசாயிகளுக்கான கட்சி என்றும்  விவசாய திட்டங்களையும் விளக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is modi waves comes to end


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->