கவர்னர் ஆகிறாரா ஓபிஎஸ்.? அண்ணாமலையின் தடாலடி.. ‌நாளை க்ளைமேக்ஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு கடும் அதுத்தியில் இருந்து வருகிறது. 

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் அணியை தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி விட்ட பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அறிவித்துள்ளார். 

இதனையில் ஓபிஎஸ் அணியினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார்.

இதனைகள் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஓபிஎஸ் அணியினர் நிறைவேற்றுமான குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் எதிர் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடப் போவதில்லை எனவும், அவருடைய மகன் ஓ.பி ரவீந்திரநாத் பாஜக சார்பில் களம் இறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காலியாக உள்ள தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளில் ஓபிஎஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழிசை சௌந்தர்ராஜன் போன்று சட்டமன்ற பொது தேர்தலின் போது அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Ops become a Governor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->