பாஜக எம்.எல்.ஏவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! மனைவியும் - காதலியும் சண்டை.!! தடியடி நடத்தி சண்டையை பிரித்த காவல் துறை.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டம் ஆர்னி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ ராஜு டோட்சம். இவரது மனைவி அங்குள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்த சமயத்தில்., பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பெண் பிரமுகருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே இவர் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில்., முதல் மனைவியான ஆசிரியரை விவாகரத்து ஏதும் செய்யவில்லை. 

இந்த சமயத்தில்., அவரது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஆதரவாளர்கள் பண்டர்காவ்டா பகுதியில் கபாடி போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டு., அதன் மூலமாக பிறந்தநாள் கேக்குகள் வெட்டப்பட்டு போட்டியானது தொடங்கியது. 

இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ ராஜுவின் மனைவியும்., அவரது காதலியும் வரவே., இருவரும் சிறிது நேரம் அமைதிகாத்து., பின்னர் இவர்களுக்குள் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிட துவங்கினர். 

இந்த சண்டையை விலக்கி விட எம்.எல்.ஏ முயன்றும் பலனளிக்காமல் செய்வதறியாது திகைக்கவே., இந்த சமயத்தை உபயோகம் செய்து கொண்டு எம்.எல்.ஏவை தாக்க துவங்கியவுடன்., அங்கிருந்த காவல் துறையினர் தடியடி நடத்தி பிரச்னையை முடிந்தனர். 

இந்த தாக்குதலில் எம்.எல்.ஏவின் காதலிக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்., பொது இடத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு வந்த எம்.எல்.ஏவின் மனைவி மற்றும் காதலி சண்டையிட்டுக்கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai bjp MLA wife and lover fight at birthday celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->