தேர்தல் நேரத்தில்.. ஈரோடு எம்.பி திடீர் தற்கொலை முயற்சி.!! வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்பி கணேசன் மூர்த்தி கடந்த 2019 ஆம் ஆண்டு முன்பு வரை மதிமுக வின் பொருளாளர் என்ற உயர் பதவியில் இருந்து வந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சியின் தார்மீக அடிப்படையில் தேர்தல் பணிகளில் கணேச மூர்த்தி ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருந்ததால் சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதை எடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவசரப் சிகிச்சை பிரிவில் இரண்டு மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் உடல்நிலை குறித்து 72 மணி நேரம் கழித்து தான் உறுதியாக கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode mp ganesamoorthy suicide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->