எங்களுக்குள் தான் போட்டி.. பாஜகவை பங்கம் செய்த ஈ.பி.எஸ்.. நேரடி அட்டாக்.!! - Seithipunal
Seithipunal


தேர்தல் என்றால் திமுக விற்கும் அதிமுகவிற்கும் இடையே தான் போட்டி என்பதை நாடு அறியும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் சயலாளர் பிரேமலதா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். 

இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி "இரண்டு நாட்களுக்கு முன்ப பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதமரை விமர்சிப்பார் அல்லது என்னை விமர்சிப்பார் அதை தவிர அவருக்கு எதுவும் தெரியாது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்ட வேண்டும் என நாங்கள் பலமுறை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளோம். 

ஆனால் திமுக என்ன செய்தது. செங்கில்லை நாடாளுமன்றத்தில் காட்டி இருக்க வேண்டும். ரோட்டில் காட்டி என்ன பயன்? விளம்பரத்திற்காக செங்கலை தூக்கி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்கிரிப்ட் மாத்தப்பா... கதையை மாத்து... இதையே காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். 

தேர்தலில் மூன்று பிரதான கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் போட்டி என்று வரும்போது அது அதிமுகவா திமுகவா என்பதை நாடு அறியும் தமிழ்நாடு மக்கள் அறிவார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized BJP and DMK in Trichy meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->