அ.தி.மு.க ஆட்சி தான் 'பொற்கால ஆட்சி'... - இபிஎஸ் பெருமிதம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அது போல அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. வீட்டு மக்களை பற்றி தான் கவலை. 

மக்களை சந்தித்தால் தான் அவர்கள் அடையும் துயரங்கள் குறித்து முதல்வருக்கு தெரியும். தமிழகத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சி தான் பொற்கால ஆட்சியாகும். 

வருகின்ற தேர்தலில் அடையும் தோல்வியோடு தி.மு.கவின் சரித்திரமும் முடிந்துவிடும். அ.தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு என்பதே இல்லை. 

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் தான் மின்வெட்டு பிரச்சனையால் இருண்ட காலமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->